காசு இல்லாததால் படம் நடிக்கிறேனா கௌதம் மேனன் ஆவேசம்
தன்னை பற்றி வரும் ஒரு விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்து இருக்கிறார் கெளதம் மேனன்.இளைஞர்கள் கொண்டாடும் பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தவர் கௌதம் மேனன். கௌதம் மேனன் சொந்தமாக படம் தயாரிப்பில் ஈடுபட்டு பண சிக்கலில் மாட்டியதால் அதை எல்லாம் சமாளிக்க தான் சமீப காலமாக பல படங்களில் நடித்து வருகிறார் என்று தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒரு பேட்டியில் இந்த விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார் கௌதம் மேனன். ‘நான் financially down என மக்கள் நினைகிறார்கள். காசு இல்லாததால் படம் நடிக்கிறேன் என பேசுகிறார்கள். ஆனால் அது உண்மை இல்லை’.’எனக்கு நடிக்க விருப்பம் இருக்கிறது. யாரிடமாவது கேட்டு அவர்கள் முடியாது என கூறிவிட்டால், அதை நாமே செய்துவிடலாம் என முடிவெடுப்பேன். என்னை நானே இயக்கி கொள்வது எனக்கு பிடிக்காது. அதனால் யாரவது படம் நடிக்க அழைத்தால் நான் நோ சொல்ல மாட்டேன்’. “விடுதலை படத்திற்காக வெற்றிமாறன் அழைத்தபோது அவர் பணியாற்றும் விதத்தை பார்க்க விரும்பினேன். ஆரம்பத்தில் மூன்று நாட்கள் என சொன்னாலும் மொத்தம் 7 – 8 நாட்களுக்கு ஷூட்டிங் செய்தேன்” என கௌதம் மேனன் கூறி இருக்கிறார்.
GIPHY App Key not set. Please check settings