கல்யாணத்தின்போது ஷாலினிக்காக அஜித் கொடுத்த வரதட்சணை..
ரீல் ஜோடியாக இருந்து ரியல் ஜோடியாக மாறிய எத்தனையோ நட்சத்திரங்களை நாம் பார்த்திருக்கிறோம். 23 வருடங்களாக குறையாத காதலுடன் அவர்கள் வாழ்ந்து வருவதே இதற்கான சாட்சி. தன்னுடைய தேவதையை மிஸ் செய்து விடக் கூடாது என அஜித் ஒரு விஷயத்தை செய்திருக்கிறார்.அதாவது இவர்களின் கல்யாண அறிவிப்பு வந்த சமயத்தில் ஷாலினி தமிழில் ரொம்பவும் பிசியான நடிகையாக இருந்தார். அதிலும் தமிழ் திரையுலகில் அவரின் மார்க்கெட் உச்சத்தில் இருந்தது. இதனால் அவருடைய அப்பா இப்போதைக்கு திருமணம் வேண்டாம், நிறைய படங்களில் நடித்து செட்டிலான பிறகு கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்.ஆனால் தன் காதலியை உடனே மனைவியாக்கி விட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த அஜித் அவர் அப்பாவே சம்மதம் கூறும் வகையில் ஒரு விஷயத்தை செய்திருக்கிறார். அதாவது ஷாலினி இன்னும் எத்தனை வருடங்கள் சினிமாவில் நடித்து சம்பாதித்தாரோ அவ்வளவு பணத்தையும் மொத்தமாக தன் மாமனாரிடம் அவர் கொடுத்திருக்கிறார்.சுருக்கமாக சொல்லப்போனால் தன் வருங்கால மனைவிக்காக அஜித் கொடுத்த வரதட்சணை தான் இது. அதன் பிறகே இவர்களுடைய திருமணம் நடந்திருக்கிறது. இப்படியும் ஒரு காதலா என வியக்க வைத்திருக்கிறது.இதுவே அஜித், ஷாலினி மீது எந்த அளவுக்கு காதலுடன் இருந்திருக்கிறார் என்பதையும் தெரிய வைத்துள்ளது.
GIPHY App Key not set. Please check settings