in

கலைஞர் நூற்றாண்டு முத்தமிழ் தேர்


Watch – YouTube Click

கலைஞர் நூற்றாண்டு முத்தமிழ் தேர் மேல்மலையனூர் ஒன்றியம் வளத்திக்கு வருகை-அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் மலர் தூவி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

*விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுக்கா உட்பட்ட வளத்தி கிராமத்தில்
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட எழுத்தாளர் கலைஞர் குழுவின் சார்பில்* வடிவமைக்கப்பட்ட முத்தமிழ் தேர் என்ற பேனா வடிவிலான அலங்கார உறுதி கடந்த 4ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் பயணத்தை தொடங்கியது.*

இந்த அலங்கார ஊர்தியானது பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று இன்று விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஒன்றியம் வளத்தி ஊராட்சிக்கு வந்தடைந்தது.

வளத்தி ஊராட்சிக்கு வருகை தந்த இந்த முத்தமிழ் தேர் அலங்கார ஊர்திணை வரவேற்கும் விதமாக மேலத்தாலங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தியினை சிறுபான்மையர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் மேல்மலையனூர் ஒன்றிய பெருந்தலைவர் கண்மணி நெடுஞ்செழியன்,ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், ஆகியோர் கலந்து கொண்டு முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தியை மலர் தூவி வரவேற்றனர்.

பின்னர் அலங்கார ஊர்தியின் உள்ளே அமைக்கப்பட்டிருக்கும் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்களின் திருவுருவ சிலைக்கும் கலைஞரின் சிலை அருகில் அமைக்கப்பட்டுள்ள அஞ்சுகம் தாயாரின் திருவுருவ சிலைக்கும் அமைச்சர் செஞ்சி மஸ்தான்,ஒன்றிய பெருந்தலைவர் கண்மணி நெடுஞ்செழியன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

வளத்தி அரசு பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் கலைஞர் பேனாவிற்கு மலர் தூவி பேனாவின் உள்ளே அமைக்கப்பட்டுள்ள கலைஞர் எழுதிய மொழிகளையும்,கலைஞர் சிலையை பார்வையிட்டனர்.

கலந்து கொண்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு கலைஞரின் நினைவாக கலைஞர் 100 என குறிக்கப்பட்ட பேனா பரிசாக வழங்கப்பட்டது.


Watch – YouTube Click

What do you think?

மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை ஊர்வலம்

அச்சிறுபாக்கம் சேறும், சகதியமாக உள்ள சாலையில், நாற்று நடும் போராட்டம்