கலிபோர்னியாவில் ரயில்வே பணிமனை மீது துப்பாக்கிச் சூடு

8 பேர் பலி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான் ஜோஸ் பகுதியில் உள்ள ரயில்வே பணிமனை மீது புதன்கிழமை காலை ஆயுதம் ஏந்திய நபர் ஒருவர், திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கினார். இதில், அங்கிருந்த ரயில்வே ஊழியர்கள் உள்பட 8 பேர் பலியானதாகவும், ஏராளமானோர் காயமடைந்ததாகவும் சிபிஎன் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனிடையே, இந்த துயர சம்பவத்துக்கு காரணமான நபரை காவல் துறை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல் தெரிவிக்கிறது.

இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசோம், உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து விவரங்களை உடனுக்குடன் கேட்டறிவதாகவும், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் இந்த ஆண்டில் இதுவரை 230 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Add your comment

Your email address will not be published.

12 − 12 =