கலப்பு கரோனா தடுப்பூசி சோதனை

ஏற்கெனவே முதல் தவணையாக ஒருவகை கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட நபர், இரண்டாம் தவணையின்போது வேறு வகை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் ஏற்படும் விளைவுகள் குறித்து பிரிட்டனில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

50 வயதுக்கு மேற்பட்ட, பைஸர் அல்லது அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியை முதல்கட்டமாக செலுத்திக் கொண்ட நபர்கள் இதில் பங்கேற்கலாம் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இரண்டாம்தவணையாக அவர்களுக்கு அதேவகை தடுப்பூசியோ அல்லது மாடர்னா அல்லது நோவாவாக்ஸ் தடுப்பூசி செலுத்துப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இருவகை தடுப்பூசிகளை கலப்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

Add your comment

Your email address will not be published.

5 × 4 =