கரோனா உயிரிழப்பு; 1.44 சதவீதமாக குறைவு | Daily New Cases

இந்தியாவில் கரோனா உயிரிழப்பு வீதம் 1.44 சதவீதமாக உள்ளது.

இந்தியாவில் கடந்த 7 நாட்களாக, தினசரி கொவிட் பாதிப்பு 20,000க்கும் கீழ் உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 16,946 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் 17,652 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில் கொவிட் தொற்றால் ஏற்படும் தினசரி உயிரிழப்பும் குறைந்து வருகிறது. கடந்த 20 நாட்களாக, 300க்கும் குறைவான தினசரி உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் உயிரிழப்பு வீதம் 1.44 சதவீதமாக உள்ளது.

நாட்டில் தற்போது 2,13,603 பேர் கொவிட் சிகிச்சை பெறுகின்றனர்.

நம் நாட்டில் மொத்த 1,01,46,763 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் வீதம் 96.52 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 198 பேர், உயிரிழந்துள்ளனர்.

நன்றி இந்து தமிழ் திசை