கருச்சிதைவு ஏற்படும் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு

 

லண்டனில் முதல்முறையாக அமலுக்கு வருகிறது

 

கருச்சிதைவு அல்லது பிரசவத்தின்போது குழந்தை இறந்து பிறத்தல் உள்ளிட்ட காரணங்களால் வேலைக்கு செல்லும் பெண்கள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஒருவாரம் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க லண்டன் உள்ளாட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பிரிட்டனிலேயே இதுபோன்ற முடிவை முதன்முறையாக அமல்படுத்தும் உள்ளாட்சி அமைப்பாக லண்டன் திகழ்கிறது.

பிரிட்டனில் ஆண்டுதோறும் நான்கில் ஒரு பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்படுவதாக ஆய்வில் தெரியவருகிறது. எனவே, வேலைக்கு செல்லும் பெண்கள் மேற்கொள்ளும் இடர்பாட்டை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க பார்க்கிங் மர்றும் டாகன்ஹாம் கவுன்சில் முடிவு செய்துள்ளது. கருச்சிதைவால் அவதியுறும் பெண்கள் மட்டுமன்றி, அவர்களது கணவர்களுக்கும் இந்த விடுப்பு விதிமுறை பொருந்தும் என்றும் உள்ளாட்சி ஆணையரகம் தகவல் வெளியிட்டுள்ளது.

Add your comment

Your email address will not be published.

19 − twelve =