கனடாவில் விக்டோரியா மகாராணி, இரண்டாம் எலிசெபத் சிலை அவமதிப்பு

பிரதமர் போரிஸ் ஜான்சன் கண்டனம்

கனடாவில் உண்டு உறைவிடப் பள்ளிகளில் குறியீடு இடப்படாத நிலையில் மாணவர்களின் சமாதிகள் கண்டறியப்பட்டதால், வெகுண்டெழுந்த பூர்வகுடிகள், வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், விக்டோரியா மகாராணி சிலையையும், இளவரசி இரண்டாம் எலிசெபத் சிலையையும் அவர்கள் தகர்த்தெறிந்தது மட்டுமல்லாமல், அவற்றின் மீது சிவப்பு வர்ணம் பூசி அவமதித்தனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், எங்கள் அரச குடும்பத்தினர் அவமதிக்கப்படுவதை பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்றார்.

Add your comment

Your email address will not be published.

three × 4 =