கடலூரில் வி ஸ்கொயர் மால் எம் ஆர் கே பி கதிரவன் திறந்து வைத்தார்
கடலூரில் வி ஸ்கொயர் மால் திறப்பு விழா. கடலூர். நவம்பர்.2
கடலூரில் வி ஸ்கொயர் மால் மாபெரும் திறப்பு விழா நடைபெற்றது இந்த திறப்பு விழாவிற்கு திராவிட முன்னேற்ற கழக கிழக்கு மாவட்ட பொருளாளர் எம் ஆர் கே பி.கதிரவன் திறந்து வைத்தார். வி ஸ்கொயர் மால நிறுவனர் ரமேஷ் அனிதா ரமேஷ் லைன்ஸ் பாடலை சங்கர் செட்டியார் மற்றும் உமாசங்கர் கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா துணை மேயர் தாமரைச்செல்வன் திராவிட முன்னேற்ற கழக நகர செயலாளர் ராஜா ஆகியோர் குத்து விளக்கேற்றினர்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் தொழில் துறை அமைச்சர் எம். சி. சம்பத் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்ச நிர்வாகி மாதவன் கடலூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் மணிகண்டன் நகரத் தலைவர் வேலு வெங்கடேசன் மற்றும் பல்வேறு கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் மருத்துவர்கள் வணிகர் சங்க நிர்வாகிகள் பல்வேறு ,தொழில் அதிபர்கள், வணிகர்சங்க பெருமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகினார்கள்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை வள்ளி விலாஸ் குடும்பத்தினர் மற்றும் பாடலி சங்கர் செட்டியார் குடும்பத்தினர்செய்தனர். நிகழ்ச்சியில் எம். ரமேஷ், அனிதா ரமேஷ், எஸ். சொர்ணமால்யா ,ஜெ சரவணன் ,ஆர். லக்ஷினமாலியா ஆகியோர் நன்றி கூறினர்.