ஐகோர்ட்டில் வழக்குப் போட்ட ஐஸ்வர்யா ராய் மகள்
பொன்னியின் செல்வன் 2 ப்ரோமோஷனுக்கு கூட வரமுடியாத அளவுக்கு நடிகை ஐஸ்வர்யா ராய் பெரும் சிக்கலில் சிக்கி உள்ளார். அதற்கு காரணம் அவரது மகள் ஆராத்யா பச்சன் தொடுத்துள்ள வழக்கு தான் என்கின்றனர். இந்நிலையில், தன்னைப் பற்றிய அவதூறு கருத்துக்களை பரப்பிய 10 யூடியூப் சேனல்களை தடை செய்ய வேண்டும் என ஆராத்யா பச்சன் டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார். அமிதாப் பச்சனின் பேத்தியும் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராயின் மகளான ஆராத்யா பச்சனுக்கு 12 வயதாகிறது. அடிக்கடி அம்மா ஐஸ்வர்யா ராயுடன் விருது விழாக்களுக்கும், சினிமா விழாக்களுக்கும் குழந்தையாக இருந்ததில் இருந்தே சென்று வருகிறார். இந்நிலையில், அவர் குறித்து தவறான வதந்தி ஒன்றை 10க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் பரப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை சும்மா விடக் கூடாது என நினைத்து ஐஸ்வர்யா ராயின் மகள் துணிந்து செய்துள்ள காரியம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யாவின் உடல்நலம் சரியில்லை என்றும் அவருக்கு அரிய வகை நோய் உள்ளதாகவும் யூடியூப் சேனல்கள் சமீபத்தில் வதந்தி ஒன்றை பரப்பின. அந்த வீடியோவை டெலிட் செய்ய வேண்டும் என்றும் மேலும், அவர்கள் செய்த தவறுக்கு உரிய தண்டனையை வழங்க வேண்டும் என ஆராத்யா பச்சன் வழக்கறிஞர்களான ஆனந்த் மற்றும் நாயக் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கு ஏப்ரல் 20ம் தேதியான இன்று விசாரணைக்கு வருகிறது. தனது மகள் குறித்து தப்பான வதந்தி பரவி வரும் நிலையில், அதற்கான வழக்கு வேலைகளில் ஈடுபட்டுள்ளதால் தான் நடிகை ஐஸ்வர்யா ராய் பொன்னியின் செல்வன் 2 ப்ரோமோஷனல் மீட்டிங்கில் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆடை இல்லாமல் நடிக்க சமந்தா சம்மந்தம் சர்ச்சையில் சிக்குவாரா | Will Samantha get into controversy ..

GIPHY App Key not set. Please check settings