ஏவிஎம் மியூசியத்தில் ரஜினிக்கு சிலை.. வருகை தந்து கமல்
பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் ஏராளமான வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கிறது. 78 ஆண்டுகளாக தனித்து நிற்கும் இந்த நிறுவனம் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் பல தரமான சீரியல்களையும் தயாரித்து இருக்கிறது. இந்நிலையில் ஏவிஎம் நிறுவனம் தற்போது தங்கள் ஸ்டுடியோவின் படப்பிடிப்பு தளத்தை அருங்காட்சியகமாக மாற்றி இருக்கிறது. அதற்கு ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம் என பெயரும் வைத்திருக்கிறது. இதை சில தினங்களுக்கு முன்பு முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்ததார். மேலும் இந்த நிகழ்வில் நடிகர் கமல்ஹாசனும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். அதை தொடர்ந்து வைரமுத்து, சிவகுமார் உள்ளிட்ட பல பிரபலங்களும் கலந்து கொண்டனர். தற்போது பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள அந்த அருங்காட்சியகத்தில் நம்மை வியக்க வைக்கும் பல விஷயங்களும் இடம்பெற்று இருக்கிறது.. உதாரணத்திற்கு ஓவியங்கள், பிரிட்டிஷ் கால கார்கள், படங்களில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள், ஆரம்ப காலத்தில் இருந்த புகைப்பட சாதனங்கள் என ஒவ்வொன்றும் பார்ப்பவர்களை பிரம்மிக்க வைத்திருக்கிறது.அதில் அனைவரையும் கவர்ந்த ஒரு விஷயம் தான் சூப்பர் ஸ்டாரின் உருவ சிலை. சிவாஜி திரைப்படத்தில் வரும் அந்த சிலையின் முன்பாக பலரும் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு வருகின்றனர். மேலும் பாயும் புலி திரைப்படத்தில் ரஜினி பயன்படுத்திய பைக்கும் மியூசியத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் அந்த பைக் சம்பந்தப்பட்ட காட்சிகள் எதுவும் திரைப்படத்தில் இடம்பெறவில்லை.வெறும் போஸ்டரில் மட்டுமே பார்த்த அந்த பைக்கை ரஜினி ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்துடன் கண்டு களித்து செல்பியும் எடுத்து வருகின்றனர்.
GIPHY App Key not set. Please check settings