ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை முதல்வர் ரங்கசாமி குழிதோண்டி புதைத்துள்ளார்
*புதுச்சேரி அரசின் இந்திரா காந்தி மருத்துவக்கல்லூரியில் இவ்வாண்டு மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவ கவுன்சில் ரத்து செய்துள்ளது.
அதிமுக துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் பரபரப்பு பேட்டி.*
முத்தியால்பேட்டை அதிமுக அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை முதல்வர் ரங்கசாமி குழிதோண்டி புதைத்துள்ளார்.
அரசு மருத்துவ கல்லூரிகளில் எந்த வசதியுமில்லை.இந்த குறைபாடுகளை MCI சுட்டி காட்டியும் சரிசெய்யாமல் தனியார் மருத்துவ கல்லூரிக்கு சாதகமாக செயல்பட்டதால் புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரிக்கு இவ்வாண்டு மாணவர் சேர்க்கையை MCI ரத்து செய்துள்ளது.தனியார் மருத்துவக்கல்லூரிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு பல கோடி ரூபாய் பெற்றுள்ளார் என குற்றம்சாட்டினார்.
இந்திய மருத்துவ கவுன்சில் பலமுறை குறைகளை சுற்றி காட்டியும் முதலமைச்சர் ரங்கசாமி தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு 200 புதிய இடங்கள் கிடைப்பதற்கு சாதகமாக செயல்பட்டு உள்ளார் என கூறிய வையாபுரி மணிகண்டன், இந்த விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட்டு மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை இந்த முறையில் நடைபெறுவதற்கும் இந்த ஆண்டு புதுச்சேரி மாணவர்களுக்கு 180 இடங்கள் கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.இதற்குப் போதி ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் இது தவறு என முதலமைச்சர் கூறினால் நீதிமன்றம் வரை சென்று சந்திக்கவும் தயாராக இருக்கிறேன் எனவும் தெரிவித்தார் இதற்காக அதிகாரிகள் தரப்பில் பல கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டுள்ளது என்றும் மருத்துவக் கல்லூரிக்கு இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை ரத்து என மூன்று நாட்களுக்கு முன்னே புதுச்சேரி அரசுக்கு கடிதம் வந்துவிட்டது. நேற்றைய தினம் கூட இது குறித்த ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது என மணிகண்டன் கூறினார்.
அடிப்படை வசதிகள் இல்லை, எட்டு அறுவை சிகிச்சை கூடத்தில் ஒன்று மட்டுமே இயங்குகிறது, மருத்துவம் முடித்து சீனியர் மருத்துவர் சிகிச்சை அளிப்பதில்லை.இங்கு இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மாணவர்கள் தான் சிகிச்சை அளிக்கிறார்கள். இது பற்றி MCI க்கு போன புகார்களால் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் கூட்டு சதியாக அரசு மருத்துவக் கல்லூரியில் இயக்குனர் உதயசங்கர், நிதி நிர்வாக அதிகாரி விஜயகுமார்,மருத்துவ கண்காணிப்பாளர் ஜோசப் ஆகிய அனைவரும் அரசு மருத்துவமனை மூட வேண்டும் என கூட்டு சதி செய்து திட்டமிட்டு செயல்பட்டவர்கள். உடனடியாக இவர்கள் அனைவரையும் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் வையாபுரி மணிகண்டன் தெரிவித்தார்.
GIPHY App Key not set. Please check settings