ஏழாம் இடத்தை கிரகங்கள் பார்பதால் ஏற்படும் பலன்கள்

சூரியன் ஏழாம் இடத்தை முழுப் பார்வை பார்க்கும் பொழுது மனைவியோடு இன்ப சுகம் அற்றுப் போகின்றது. ஜாதகன் சோகை பிடித்தவன் ஆகின்றான். அவனது தேகம் வெளுத்து விடுகின்றது. சத்ருக்களின் தொல்லை வேறு சேர்ந்து கொள்கிறது.

சந்திரன் பார்வைப் பட்டால் இவனது மனைவி நல்ல அழகும் குணமும் வாய்ந்தவளாக அமைகிறாள்; யானையைப் போல் கம்பீரமாக நடப்பவள். ஆயினும் பிறரிடத்தில் கொள் சொல்பவளாகின்றாள்; கெட்ட நடத்தையும் உண்டு.

செவ்வாயினால் ஏழாம் இடம் பார்கப்பட்டால் ஜாதகன் மனைவியை விட்டுபிரிந்திருக்க நேரிடும்; அல்லது விரைவில் அவளது மரணம் ஏற்படக்கூடும். ஜாதகனை நீரிழிவு நோய் தாக்கக்கூடும். ஸ்திரிகளால் சண்டையும் பயணத்தில் நஷ்டமும் ஏற்படுகின்றது.

புதனால் பார்க்கப்பட்டால் மனைவியினால் சுகம் உண்டு. ஜாதகன் நல்ல கட்டழகனாய் விளங்குவான். கல்வி வளமும் தனதான்ய சம்பத்தும் மிக்கவன்.

குருவினால் பார்க்கப்படும் பொழுது களத்திர சுகம், வியாபார லாபம், பெரும் புகழ் அனைத்தும் கிட்டுகிறது. தனவான் மட்டுமின்றி தர்மவானாகவும் திகழ்கின்றான்.