என்ன இது ‘பத்து தல’ படத்திற்கு வந்த சோதனை..!
டிகர் சிம்பு – கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான, ‘பத்து தல’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில், நடிகர் சிம்பு தன்னுடைய வயதுக்கு மீறிய மெச்சூர்டான கதாபாத்திரத்தில் நடித்து மாஸ் காட்டிய திரைப்படம் ‘பத்து தல’. மேலும் இப்படத்தில் ஹீரோவாக கெளதம் கார்த்திக் இதுவரை நடித்திராத போலீஸ் அதிகாரி கெட்டப்பில் நடித்து அசத்தினார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும்… முதல் நாளே மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்தது. அதே போல் முதல் நாளில் 13 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்பட்டது. அடுத்தடுத்த நாட்களில் இப்படத்தின் வசூல் குறைந்தாலும், முதலுக்கு மோசம் இல்லாத லாபத்தை பெற்று தந்தாக படக்குழு அறிவித்தது மட்டும் இன்றி, இப்படத்தின் சக்ஸஸையும் கொண்டாடி மகிழ்ந்தது. இந்த படம் குறித்த அறிவிப்பு கடந்த 2019-ம் ஆண்டே அறிவிக்கப்பட்ட நிலையில், படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டதால், சிம்பு தன்னுடைய உடல் எடையை குறைத்து, ‘மாநாடு’ மற்றும் ‘வெந்து தணிந்தது காடு’ ஆகிய படங்களில் நடித்த பின்… மீண்டும் உடல் எடையை கூட்டி இந்த படத்தை நடித்து முடித்தார். ‘பத்து தல’ திரைப்படம் மார்ச் 30 ஆம் தேதி, வெளியான நிலையில்… தற்போது இந்த படத்தின், ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த வாரம்… அதாவது ஏப்ரல் 27-ஆம் தேதி, அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகி, சிம்பு ரசிகர்களை குஷியாக்கி உள்ளது.
GIPHY App Key not set. Please check settings