என்னால குருடா , முட்டாளா இருக்க முடியாது .. என்னை வெளியே அனுப்புங்க பிக்பாஸ் .. தனிமையில் அழும் விசித்ரா
பிக்பாஸ்ஸிடம் தன்னை வெளியே அனுப்பி விடுமாறு விசித்ரா கதறி அழுத வீடியோ வைரலாகி வருகிறது. விசித்ரா அம்மா அம்மா..ன்னு ட்ராமா போடுறாங்க என்று , மாயா, பூர்ணிமா விமர்சனம் செய்தார்கள்.
இதற்கு விசித்ரா இனிமே யாராவது என்னை மரியாதை குறைவாக பேசினால் மைக்கை கழட்டி விட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிடுவேன் என்றும் என்னை விசித்ரா மேம் …இன்னு தான் கூப்பிட வேண்டும் என்றும் ஆர்டர் போட்டார்.
மெர்சலான மாயா கட்டி பிடித்து விசித்ராவை கூல் பண்ணார். இதை நினைத்து அழுது கொண்டிருக்கும் விசித்ராவிடம் BIGGBOSS சமரசம் பண்னும் வீடியோ தற்போது வெளியாகி வைரலாக வருகிறது.
BIGGBOSS கூறியதாவது, நீங்கள் மீண்டும் பிக்பாஸ் விளையாட்டில் கவனம் செலுத்துங்கள் .நேற்று ஒரு கெட்ட நாள் என்று நினைத்து கொள்ளுங்கள். ஆனால் இன்று புது நாள்… புது முயற்சி, ஒரு குழுவாக சேர்ந்து விளையாடுவது தான் இந்நிகழ்ச்சியின் நோக்கம் . அதை நீங்கள் செய்கிறீர்கள். அதனால் தான் உங்களை என்னால் புஷ் பண்ண முடியுது. இதனை கடந்து வந்தால் தான் நீங்கள் மற்றவர்களை விட சிறந்தவர்களாவீர்கள்.
இதற்க்கு பதில் அளித்த விசித்ரா, என்னால் முடிந்தவரை ஒவ்வொரு நாளும் சிறந்தவராக இருக்க நினைக்கிறன். ஆனால் என்னுடைய சுயமரியாதையை விட்டுக்கொடுக்க மாட்டேன்.
என்னை காது கேளாதரவர், மூளை இல்லாதவர் போலும் நினைத்தால் அதனை நான் ஏற்க மாட்டேன் . ஜெயாவுக்கும் , விசித்ராவுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. இதற்கு பதில் கூறிய பிக்பாஸ் நீங்கள் எங்கெல்லாம் உங்களின் பெஸ்ட்டை கொடுக்கவில்லையோ அங்கெல்லாம் நான் இருக்கேன் , இதற்க்கு நன்றி சொல்லும் விசித்ரா நான் டவுன் ஆனால் என்னை நீங்கள் தான்’புஷ் பண்ண வேண்டும் என கேட்கிறார்.
அதற்க்கு தானே பிக்பாஸ் நான் இருக்கிறேன், அது தான்னே என் வேலை என கூறுகிறார். மேலும் இதுவும் கடந்து போகும் என ஆறுதல் சொல்லி முடிக்கிறார். இனிமேல் விசித்ரா தன்னுடைய பெஸ்ட்டை கொடுப்பார் , ஆட்டம் சூடு பிடிக்க போகிறது