எனக்கு வினோதமான நோய் இருக்கு; வனிதா பளீச் பதில்
நடிகை வனிதா விஜயகுமார் தனக்கு இருக்கும் நோய் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், னக்கு கிளாஸ்ட்ரோஃபோபியா நோய் இருக்கிறது. இது என்னுடன் நெருக்கமாக
இருபவர்களுக்கு தெரியும். சின்ன இடங்களில் என்னால் இருக்க முடியாது. லிப்ட்டில் நீண்ட நேரம் இருக்க முடியாது. கழிப்பறை கூட அப்படி தான். நான் பொது கழிப்பறைக்கு செல்லவே மாட்டேன். எனக்கு அங்கே போகவே பயமாக இருக்கும் இரண்டு நாள் வரை கூட கழிப்பறைக்கு போகமால் இருப்பேன்.நான் கேரவனில் இருக்கும் கழிப்பறையை பயன்படுத்தவே மாட்டேன். உடை மாற்றிவிட்டு உடனே அங்கிருந்து வந்துவிடுவேன். பிக் பாஸில் கூட கிளாஸ்ட்ரோஃபோபியா சூழ்நிலை தான். இதில் தாக்குப்பிடிக்கும் சந்தர்ப்பம் என்பது ஒருவருக்கு ஒருவர் மாறுப்படும்.என் வாழ்க்கையும் அதே போல் தான். நான் ஒரு இடத்தில் அடைக்கப்பட்டேன் என்றால் அங்கு இருக்கமாட்டேன். அவர்கள் வேண்டாம் என்று சொல்லி வந்துவிடுவேன் என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
GIPHY App Key not set. Please check settings