எந்த கட்சி முதுகிலும் பயணிக்கும் அவசியம் பாஜகவுக்கு இல்லை: அதிமுகவுக்கு நடிகை கவுதமி பதில் | Actress Gautami responds to ADMK

actress-gautami-responds-to-admk

ஸ்ரீவில்லிபுத்தூர்

எந்தக் கட்சியின் முதுகிலும் ஏறிப்பயணம் செய்யவேண்டிய அவசியம் பாஜகவுக்குஇல்லை என அக்கட்சியின் ராஜபாளையம் தொகுதி பொறுப்பாளரும் நடிகையுமான கவுதமி கூறினார். ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் வளாகத்தில் பாஜக சார்பில் `நம்ம ஊர் பொங்கல் விழா’ நடைபெற்றது.

இதில், கவுதமி பெண்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் கவுதமி கூறியதாவது:

அதிமுக- பாஜக இடையிலான முதல்வர் வேட்பாளர் முரண்பாடு குறித்து விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும். அரசியல் மாற்றம் குறித்து சசிகலா வெளியே வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம். பாஜகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து ரஜினிதான் முடிவு செய்ய வேண்டும்.

ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என ரசிகர்கள் போராட்டம் செய்வது பாசத்தின் வெளிப் பாடுதான் என்றார். தேசியக் கட்சிகள் குறித்து அதிமுக மூத்த நிர்வாகி முனுசாமி கூறிய கருத்து குறித்துக் கேட்டதற்கு, எந்தக் கட்சியின் முதுகிலும் ஏறிப் பயணம் செய்ய வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை என்று கவுதமி கூறினார்.

நன்றி இந்து தமிழ் திசை