in

எந்திரன் படத்தில் சிட்டியாக நடித்த நடிகர் இவர் தான் | the actor played Chiti in the movie Enthiran

எந்திரன் படத்தில் சிட்டியாக நடித்த நடிகர் இவர் தான்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு சந்திரமுகி திரைப்படத்திற்கு பிறகு மிகப்பெரிய பிரேக் கொடுத்த திரைப்படம் என்றால் அது எந்திரன் தான். இயக்குனர் சங்கர் மற்றும் ரஜினி இருவரும் முதன்முதலாக சேர்ந்து பணியாற்றிய திரைப்படம் இது. இதில் வசீகரன் மற்றும் சிட்டி என்ற இரண்டு கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருப்பார். என்னதான் தொழில்நுட்பத்தை அதிகமாக உபயோகப்படுத்தி இருந்தாலும் இரண்டு கதாபாத்திரங்கள் ஒன்றாக இருப்பது போல் அமைக்கப்பட்ட காட்சிகளில் ரஜினிக்கு டூப் போடப்பட்டிருக்கிறது. அப்படி டூப் போட்டது பிரபல தமிழ் இயக்குனரின் மகன் என்று தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பாரதிராஜாவின் மகனான மனோஜ் குமார் தாஜ்மஹால் என்னும் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். அதன்பின்னர் மனோஜ் வருஷமெல்லாம் வசந்தம், சமுத்திரம், அல்லி அர்ஜுனா போன்ற படங்களில் நடித்தார். நல்ல நடிப்பு திறமை இருந்தும் அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை. பாரதிராஜாவின் இயக்கத்தில் மீண்டும் அன்னக்கொடி திரைப்படத்தில் வில்லனாகவும் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். ஆனால் அதுவும் அவருக்கு கை கொடுக்கவில்லை. சினிமாவில் எந்த வாய்ப்புகளும் கிடைக்காததால் மனோஜ் இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார். அப்போதுதான் எந்திரன் திரைப்படத்தில் ரஜினிக்கு டூப் போடும் வாய்ப்பு இவருக்கு கிடைத்திருக்கிறது. இதை சமீபத்திய பேட்டி ஒன்றில் மனோஜ் பகிர்ந்து இருக்கிறார்.

What do you think?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

முத்தம் கொடுத்த விஜய் சேதுபதி …… ‘ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஓடிய ஸ்ருதிஹாசன்

மனைவி கேவலபடுதியதால் தான் விவாகரத்து செய்தேன் வேதனையுடன் நடிகர் பப்லு | Babloo Divorce 1st wife