in

எட்டுக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் நள்ளிரவில் தீ


Watch – YouTube Click

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் வீட்டுக்கு எதிரே சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எட்டுக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் நள்ளிரவில் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

புதுச்சேரி முத்தியால்பேட்டை விசுவநாதன் நகரில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது.

இங்கு வசிக்கும் மக்கள் இரவு நேரத்தில் தங்களது இரு சக்கர வாகனங்கள்மற்றும் கார்களை சாலையில் நிறுத்தி வைப்பது வழக்கம்.

அதுபோல் நேற்று இரவு முத்தியால்பேட்டை விசுவநாதன் நகரில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எட்டுக்கும் மேற்பட்ட வாகனங்கள் திடீரென தீப்பற்றி எரிந்தது.

அப்பொழுது வாகனங்கள் வெடிக்கும் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் எழுந்து வந்து பார்க்கும்போது எட்டுக்கும் மேற்பட்ட வாகனங்கள் முழுவதுமாக இருந்து சாம்பலாகி இருந்தது.

இதுகுறித்து முத்தியால்பேட்டை காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த முத்தியால்பேட்டை போலீசார் எட்டுக்கு மேற்பட்ட வாகனங்கள் தீ பற்றி எரிந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் முன்னிரோதம் காரணமாக வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதா அல்லது மின் கசிவு காரணமாக வாகனங்கள் தீப்பற்றி எரிந்ததா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் முத்தியால்பேட்டையில் வீட்டுக்கு எதிரே சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எட்டுக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் திடீரென தீப்பெட்டி இருந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Watch – YouTube Click

What do you think?

முதல்வர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்த வியட்நாம் கலைக்குழுவினர்

புரட்சித்தலைவி அம்மா வின் 7 ஆண்டு நினைவு தினம் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி மரியாதை