உள்ளூர் பொதுமுடக்கம் தவிர்க்க முடியாதது

 

அரசுத்துறை வட்டாரங்கள் தகவல்

 

பிரிட்டனில் இந்திய வகை கரோனா தொற்று பெருகிவருவதால், அதைக் கட்டுப்படுத்த உள்ளூர் மற்றும் பிராந்திய அளவில் பொதுமுடக்கத்தை மீண்டும் அமல்படுத்துவது தவிர்க்கமுடியாதது என்று அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேவைப்பட்டால், இங்கிலாந்தின் சில பகுதிகளில் பொருளாதார மற்றும் சமூக கட்டுப்பாடுகளும் விதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், கரோனாவால் அதிகளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இங்கிலாந்தில் இதுவரை 1,313 பேருக்கு உருமாறிய இந்திய வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டதால், அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையில் அரசு துரிதமாக செயல்பட்டு வருகிறது. கடந்த 5ஆம் தேதி வரை 520 ஆக இருந்த இந்த எண்ணிக்கை அடுத்த சில நாள்களிலேயே இரண்டு மடங்கை கடந்தது குறிப்பிடத்தக்கது.

Add your comment

Your email address will not be published.

16 − three =