உலக கடிதம் எழுதும் தினத்தினை முன்னிட்டு வண்ண கையெழுத்துடன் கூடிய 44 பக்க கோரிக்கை மனுவை சமூக ஆர்வலர், மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.
கையால் எழுதும் கடிதமும், கையால் எழுதும் கலையும் மறந்தும், மறைந்தும் போய்விட்டது. இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த செப்டம்பர் 1ம் தேதி உலக கடிதம் எழுதும் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது
இதனை ஒவ்வொரு கலைஞரும் வித்தியாசமான முறையில் இந்த தினத்தினை சிறப்பிப்பது வழக்கம். அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த சின்ன பெருமாள் என்ற சமூக ஆர்வலர் தனது வண்ண கையெழுத்துக்கள் மூலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து சமூக பாதிப்பை சுட்டிக்காட்டி மனுக்களாக அளித்து வருகிறார். அந்த வகையில் இன்று சிவகங்கை அரண்மனை வாயில் முன்பு அமைந்துள்ள வேலு நாச்சியார் சிலை முன்பு 44 பக்க வண்ண கையெழுத்து என்று கூடிய கோரிக்கை மனுவை வைத்து வணங்கி விட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆஷா அஜித்தை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது இதுவரை மாவட்ட ஆட்சியர்களை சந்தித்து தனது வண்ண கையெழுத்துக்கள் மூலம் சமுதாய பிரச்சனைகளை தீர்க்க 2300 மனுக்கள் வழங்கியதாகவும், அவற்றில் 70 மனுக்கள் மட்டுமே நிராகரிக்கப்பட்டு பிற அனைத்து மனுக்களும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது பேனா மைக்கு கிடைத்த வெற்றி என்றும், இன்று வழங்கிய 44 மனுக்களில், முதல்வரின் காலை உணவு திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவுபடுத்த வேண்டியும், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் சிவகங்கை ஆட்சியராக 101 நாள் பணியாற்றி செய்த சாதனையை விளக்கிக் கூறும் விதமாகவும், தேவகோட்டை அருகே உள்ள சங்கரபதி கோட்டையை புதுப்பித்து சுற்றுலாத்தலமாக்க தமிழக அரசு 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இதுவரை எந்த ஒரு பணியும் நடைபெறாதை சுட்டிக்காட்டியும், சிவகங்கை மாவட்டம் முழுமைக்கான சமூக நல கடிதங்களை வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.