உலகிலேயே பெரிய கிட்னி கொண்ட மனிதர்! சாதனை அல்ல; வேதனை

தலைப்பை பார்த்ததும் ஏதோ சாதித்தது போல் தோன்றும். ஆனால், உண்மை அதுவல்ல. இங்கிலாந்தின் வின்ஸ்டரை சேர்ந்தவர் வாரன் ஹக்ஸ் (வயது 54). இவர் தனது 35ஆவது வயதில் கிட்னி தொற்றுக்கு ஆளானார். நாளுக்கு நாள் வயிறு வீங்கியதால், பார்ப்பதற்கு கர்ப்பிணியை போல் காட்சியளித்தார். தனது தோற்றம் குறித்து வேதனையடைந்த அவர், மருத்துவரை அணுகியபோது தான் விஷயம் தெரியவந்தது. அதாவது 5 ஆண்டுகளில், அவரது கிட்னிகள் இரண்டும் சாதாரண நிலையை விட 5 மடங்கு அதிகரித்தது தெரியவந்தது.

இதனால், வலதுபக்கம் பக்கவாதம் ஏற்பட்டு ஒரு பகுதியே செயலிழந்தது. இதுமட்டுமல்லாமல், கிட்னி பருத்ததால் அது நுரையீரல், வயிறையும் பாதிக்க ஆரம்பித்தது. தற்போது அவரது இதயத்தையும் நசுக்க ஆரம்பித்துவிட்டது பருத்துபோன அந்த கிட்னி. கடந்த 20 ஆண்டுகளில் அவரது கிட்னிகள் இரண்டும் ஏறத்தாழ 7.4 கிலோ எடை அதிகரித்ததே இதற்கு காரணம். இதனால் சொல்லொண்ணா துயரத்துக்கு ஆளானார் வாரன் ஹக்ஸ். அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். அதன்படி, இந்தியாவில் உள்ள மருத்துவமனைக்கு அவர் அனுப்பிவைக்கப்பட்டு, இரு கிட்னிகளும் வெற்றிகரமாக அகற்றப்பட்டன. அறுவை சிகிச்சைக்கு பின்னர் டயாலிசிஸ் செய்துகொள்ள வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதற்காக நிதி திரட்டும் பணியில் நண்பர்கள் உதவியுடன் இறங்கியிருக்கிறார் வாரன் ஹக்ஸ்.

Add your comment

Your email address will not be published.

ten + three =