உருமாறிய கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது.
நம் நாட்டில் உருமாறிய கோவிட் (இங்கிலாந்து) வைரஸால் 96 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இந்த வைரசால் புதிதாக பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
கோவிட் பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா இன்று புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. அன்றாட புதிய நோயாளிகளின் எண்ணிக்கை மிக குறைந்த அளவை அடைந்துள்ளது. 7 மாதங்களுக்கு பிறகு, கடந்த 24 மணி நேரத்தில் அன்றாட புதிய நோயாளிகளின் எண்ணிக்கை 12,584-ஐ எட்டியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் 167 பேர் இறந்துள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை இன்று 2,16,558 ஆக குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 5,968 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்.
25 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் கொவிட் தொற்றால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 5,000-க்கும் குறைவாக உள்ளது.
இந்தியாவின் வாராந்திர கோவிட் பாதிப்பு விகிதம் 2.06 சதவீதமாகும்.
கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்று 1.01 கோடியைக் (1,01,11,294) கடந்துள்ளது. குணமடையும் விகிதம் 96.49 விழுக்காடாகும். கடந்த 24 மணி நேரத்தில் 18,385 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
புதிதாக கண்டறியப்பட்ட தொற்றுகளில் 80.50 விழுக்காட்டினர், 10 மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் சார்ந்தவர்கள் ஆவர்.
கடந்த 24 மணி நேரத்தில், கேரளாவில்தான் அன்றாட புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகமாக (3,110) உள்ளது. அதற்கு அடுத்து மகாராஷ்டிராவில் 2,438 பேரும், சத்தீஸ்கரில் 853 பேரும் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.