உச்சநீதிமன்ற உத்தரவை பார்த்து ஆர்.என்.ரவி பயந்து விட்டார். நாராயணசாமி பேட்டி
புதுச்சேரியில் அனைத்து உத்தரவுகளையும் துணைநிலை ஆளுநர் தமிழிசை வெளியிட்டு சூப்பர் சி.எம்.ஆக செயல்படுகிறார். எதிர்த்து பேசினால் நாற்காலி காலியாகும் என முதல்வர் ரங்கசாமி மவுனமாக இருக்கிறார். நாராயணசாமி கடும் தாக்கு.
புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், 5 மாநில தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன.4 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெறும்.இது தான் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோடி.வரும் பாராளுமன்ற தேர்தலில் இந்திய கூட்டணி வெற்றி பெறும்.இதன் மூலம் பாஜகவும் மோடியும் வீட்டுக்கு அனுப்பபடுவார்கள் என்றார்.தமிழக அரசு அனுப்பிய கோப்புகளுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் கூறி உடனே 10 கோப்புகளை ஆளுநர் ரவி உச்சநீதிமன்ற உத்தரவை பார்த்து பயந்து சுய கவுரவத்தை பாதுகாத்துகொள்ள தமிழக அரசு சார்பில் வைத்திருந்த கோப்புகளை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளார் என்றும் நாராயணசாமி தெரிவித்தார்.
வில்லியனூர் பெண் காவலர் மரணத்தில் சந்தேகம் உள்ளது.பெண்ணின் தந்தை கொடுத்த புகாரை ஏற்க போலீஸ் மறுத்து விட்டனர்.காரணம் பெண் காவலர் சாவில் வில்லியனூர் போலீசாருக்கு தொடர்பு உள்ளது.இதனை மறைக்க கணவர் மீது பொய் புகார் கூறி கைது செய்துள்ளனர். எனவே காவல் துறை தலைவர் நேரடியாக விசாரிக்க வேண்டும் எனவும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தினார்.
புதுச்சேரியில் ஆளும் அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அனைத்து உத்தரவுகளையும் துணைநிலை ஆளுநர் தமிழிசை வெளியிட்டு சூப்பர் சி.எம்.ஆக செயல்படுகிறார். எதிர்த்து பேசினால் நாற்காலி காலியாகும் என முதல்வர் ரங்கசாமி மவுனமாக இருக்கிறார் என்றும் நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழையால் சேதமடைந்த விவசாய நிலங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் காலாப்பட்டு ரசாயன தொழிற்சாலை விபத்தால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் விபத்து குறித்து முதலமைச்சர் இதுவரை வாய் திறக்கவில்லை.
பல முறைகேடுகள் இந்த தொழிற்சாலையில் நடைபெற்று வருகிறது. சாசன் நிறுவனத்திற்கு ஆதரவாக இந்த அரசு செயல்படுகிறது என்றும் நாராயணசாமி தெரிவித்தார்.