இளவரசர் பிலிப்பின் நினைவாக பால்மோரல் மலை பங்களாவுக்கு பயணிக்கும் இளவரசி 

இளவரசர் பிலிப் தனது 99ஆவது வயதில், கடந்த மாதம் உயிரிழந்தார். அவரது நினைவாக இளவரசி கோடைக் காலத்தில் எப்போதும் தனது கணவருடன் பயணிக்கும் பால்மோரல் மலைப்பகுதியில் உள்ள எஸ்டேட்டுக்கு இந்த மாதம் செல்ல திட்டமிட்டிருக்கிறார். அவருடன் மருமகள் சாரா சட்டோ உள்ளிட்டோரும் செல்கின்றனர்.

ஸ்காட்லாந்து நாட்டுக்கு சொந்தமான பால்மோரல் மலைப்பகுதியில் அரச குடும்பத்துக்கு சொந்தமான 7 படுக்கைகள் கொண்ட பங்களா உள்ளது. ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் இளவரசி தனது குடும்பத்தினருடன் இங்கு பயணித்து, தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வது வழக்கம். இந்த மலை பங்களாவில் தான் 70 ஆண்டுகளுக்கு முன்பு இளவரசர் பிலிப்பும், இளவரசி இரண்டாம் எலிசெபத்தும் தங்கள் தேன்நிலவைக் கழித்தனர்.

தற்போது இளவரசரின் மறைவால், மீளா துயரில் ஆழ்ந்த இளவரசி, அவரது நினைவாக பால்மோரல் மலை பங்களாவுக்கு இம்மாதம் செல்ல திட்டமிட்டிருக்கிறார். அவருடன் மருமகள் லேடி சாரா சட்டோ மற்றும் வின்ஸ்டர் காஸ்டில் அரண்மனை ஊழியர்களும் செல்கின்றனர்.

இதேபோல், 160 ஆண்டுகளுக்கு முன்பு இளவரசி விக்டோரியா, தனது கணவர் இளவரசர் ஆல்பர்ட்டின் மறைவால் பால்மோகரல் மலை பங்களாவுக்கு பயணமான நிலையில், தற்போது இரண்டாம் எலிசெபத்தும் தனது கணவரின் நினைவாக அதே பங்களாவுக்கு பயணிக்கிறார்.

Add your comment

Your email address will not be published.

twenty − 16 =