இரண்டு மணி நேர ஷோவுக்கு 13 லட்சம் ரூபாய் வாங்கிய மீனா
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா அதன் பிறகு ஹீரோயினாக மாறினார்.. ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்த அவர் 40 வருடங்களாக திரைத்துறையில் இருக்கிறார் .மீனா வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். உடல்நலக்குறைவால் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் வெளியுலகத்துக்கு வருவதை நிறுத்தி வீட்டுக்குள்ளேயே முடங்கும் சூழல் உருவானது. பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுப்பதை சுத்தமாக நிறுத்திவிட்ட மீனா இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மீடியாவில் தலை காண்பிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்று மீனா திரைத்துறைக்கு வந்து 40 வருடங்கள் நிறைவடைந்ததை மீனா 40 என்ற பெயரில் விழாவாக கொண்டாடினர். இதில் ரஜினிகாந்த், பிரபுதேவா, பாக்யராஜ், ராஜ்கிரண், ரோஜா, ராதிகா, குஷ்பூ உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மீனா குறித்து பேசினர். இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் மீனா எப்படி கலந்துகொண்டார் என்பது குறித்து தெரியவந்திருக்கிறது. அதாவது, அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முதலில் மீனா மறுத்துவிட்டாராம். ஆனால் அந்த யூட்யூப் சேனல், இரவு 8 மணியிலிருந்து 10 மணிவரைதான் நிகழ்ச்சி நடத்துகிறோம். அதற்காக உங்களுக்கு 13 லட்சம் ரூபாய் சம்பளமாக தருகிறோம் என கூறியதாம். இதனையடுத்து மீனா ஒத்துக்கொண்டாராம். அதுமட்டுமின்றி, ரஜினியையும் நிகழ்ச்சிக்கு அழைத்து வந்தால் இதன் ரீச் நன்றாக இருக்கும் என யூட்யூப் சேனல்காரர்கள் கூற, நான் சொன்னால் ரஜினி சார் உடனே வந்துவிடுவார் என கூறி ரஜினியையும் மீனா அழைத்துவந்தாராம்.
GIPHY App Key not set. Please check settings