இன்னும் ஏகே 62 பிரச்னையே முடியல… அதற்குள் ஏகே 63 படத்தின் இயக்குனரை முடிவு செய்த அஜித்
மகிழ் திருமேனி இயக்க உள்ள ஏகே 62 படத்தின் அப்டேட்டே இன்னும் வராமல் உள்ள நிலையில், தற்போது அஜித் ஏகே 63 பட இயக்குனரை தேர்வு செய்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் துணிவு. எச்.வினோத் இயக்கிய இப்படம் பொங்கலுக்கு ரிலீசாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. துணிவு படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் அஜித் நடிக்க கமிட் ஆன படம் ஏகே 62. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை முதலில் இயக்க கமிட் ஆனது விக்னேஷ் சிவன் தான். பின்னர் அவர் சொன்ன கதை திருப்தி அளிக்காததால், அவரை தூக்கிவிட்டு அப்படத்தை இயக்க மகிழ் திருமேனியை ஒப்பந்தம் செய்தது லைகா நிறுவனம்.பிப்ரவரி மாதமே ஏகே 62 படத்தில் கமிட் ஆகி அப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகளை தொடங்கிவிட்ட இயக்குனர் மகிழ் திருமேனி, மார்ச் மாத இறுதியில் ஷூட்டிங்கை தொடங்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் அந்த சமயத்தில் நடிகர் அஜித்தின் தந்தை மரணமடைந்துவிட்டதால், ஷூட்டிங் தொடங்குவது தாமதம் ஆனது. இதனால் மே மாதம் அஜித்தின் பிறந்தநாளன்று அப்டேட் வெளியிட்டு ஷூட்டிங்கையும் அந்த மாதமே தொடங்க திட்டமிட்டுள்ளார்களாம். இப்படி ஏகே 62 படத்தின் பஞ்சாயத்தே இன்னும் தீராத நிலையில், தற்போது அஜித்தின் ஏகே 63 படத்தை இயக்கப்போவது யார் என்கிற அப்டேட் வந்துவிட்டது. அதன்படி அஜித்தை வைத்து ஏற்கனவே வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் போன்ற படங்களை இயக்கிய சிறுத்தை சிவா தான் அஜித்தின் ஏகே 63 திரைப்படத்தையும் இயக்க உள்ளார். இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகிவிட்டதாக கூறப்படுகிறது.
GIPHY App Key not set. Please check settings