இந்திய வகை உருமாறிய கரோனா வைரûஸ மிகவும் கவனமாக கையாள வேண்டும்

 

பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவுரை

 

இந்திய வகை உருமாறிய கரோனா வைரûஸ மிகவும் கவனமாக கையாள வேண்டுமென பொது சுகாதாரத் துறைக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவுரை கூறினார்.

 

பிரிட்டனில் கண்டறியப்பட்ட இந்திய வகை உருமாறிய கரோனா வைரஸ், கவலைக்குரிய விதத்தில் உருமாற்றம் பெற்றிருப்பதாகவும், கடந்த ஆண்டில் கேண்ட் பகுதியில் கண்டறியப்பட்ட இரண்டு வகையிலான கரோனா வைரûஸ விட, இந்தியாவில் உருமாறிய பி.1.617.2 வகை எளிதில் பரவும் தன்மை கொண்டதாகவும் பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதை மேற்கோள்காட்டி கருத்து தெரிவித்த பிரதமர் போரிஸ் ஜான்சன், மிகுந்த பொருட்செலவில் நாம் கரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகிறோம். இதில், இந்தியவகை வைரûஸ கையாள்வதில் மிகவும் கவனமாக செயல்பட வேண்டுமென அறிவுறுத்தினார்.

இதனிடையே, இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா தொற்று, தீவிர உடல்நலக் குறைவை ஏற்படுத்தும் என்றோ, தடுப்பூசியின் செயல்திறனை குறைக்கும் என்றோ ஆதாரபூர்வமாக நிரூபணமாகவில்லை என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்தது.

Add your comment

Your email address will not be published.

4 × five =