இந்தியா, பாகிஸ்தான் விமானங்களுக்கு கனடா தடை

 

இந்தியா, பாகிஸ்தானில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால், இருநாடுகளிலிருந்தும் விமான சேவையை கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி முதல் மே 22ஆம் தேதி வரை கனடா நிறுத்திவைத்தது. இன்றுடன் இந்தத் தடை முடிவுக்கு வருவதால், இதை மேலும் ஒருமாத காலம் அதாவது ஜூன் 21ஆம் தேதி வரை நீட்டித்து கனடா அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் நாடுகளிலிருந்து கனடாவுக்கு நேரடி விமான சேவை ரத்து செய்யப்பட்ட போதிலும், 3ஆம் நாடுகளின் வாயிலாக அந்நாட்டு பயணிகள் கனடாவுக்கு வருவதற்கு தடையில்லை. ஆனாலும், தங்களுக்கு கரோனா இல்லை என்கிற சான்றிதழை கனட விமான நிலையத்தில் அவர்கள் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். பயணிகள் விமானத்துக்கு தடை விதிக்கப்பட்ட அதேவேளையில், அத்தியாவசிய மருந்து பொருள்களின்ளின் விநியோகத்தை கருத்தில் கொண்டு சரக்குகளை ஏற்றிச் செல்லும் விமானங்கள் தொடர்ந்து செயல்படும் என்று கனட அரசு தெரிவித்துள்ளது.

Add your comment

Your email address will not be published.

9 + four =