இந்தியாவிலிருந்து உடனடியாக வெளியேறுங்கள்

அமெரிக்க பிரஜைகளுக்கு அறிவுறுத்தல்

இந்தியாவில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை விஸ்வரூபம் எடுத்து வருவதால், அங்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்க பிரஜைகள் உடனடியாக வெளியேற வேண்டுமென வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

கரோனா இரண்டாம் அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுவரும் இந்தியாவில், கடந்த வியாழக்கிழமை மட்டும் ஒரே நாளில் 3 லட்சத்து 79 ஆயிரத்து 257 பேருக்கு தொற்று உறுதியானது. புதன்கிழமை வரையிலான நிலவரப்படி, இந்தியாவில் கரோனா தொற்றுக்கு 2 லட்சம் பேர் பலியானதாகக் கூறப்பட்டாலும், உண்மையில் இந்த எண்ணிக்கை இதை விட அதிகம் என அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்க பிரஜைகள் உடனடியாக கமர்ஷியல் விமானத்தின் மூலமாவது அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும், யாரும் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் அந்நாட்டு பிரஜைகளுக்கு வெள்ளை மாளிகை அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், இந்த அறிவுறுத்தலை வெள்ளை மாளிகை பிறப்பித்திருக்கிறது.

Add your comment

Your email address will not be published.

eighteen + four =