“இந்தியர்களுக்கு மட்டுமே வேலை” அமெரிக்க ஐடி நிறுவனத்திற்கு அபராதம்
இந்திய ஐ.டி ஊழியர்களுக்கு மட்டும் வேலை வாய்ப்பு என அறிவித்த காரணத்தால் அமெரிக்க நிறுவனதிற்கு அந்நாட்டு அரசு 25,000 டாலர் அபராதம் விதித்துள்ளளது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட தொழில்நுட்பத்துறைக்கான ஆட்சேர்ப்பு நிறுவனம் கேபோர்ஸ் டெக் எல்எல்சி (KForce Tech LLC), புதிய வேலைவாய்ப்புகளை அறிவித்து அதில் இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களை (IT employees) மட்டும் பனையமர்த்துவதாக புகார்க எழுந்தது.
இதனை அடுத்து அந்த ஆட்செர்ப்பு நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு 25,000 அமெரிக்க டாலர்கள் அபராதம் விதித்துள்ளது. இதுபற்றி அமெரிக்க அரசு அதிகாரி கூறுகையில், ‘ ஒரு குறிப்பிட்ட நாட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே வேலை என வேலைகளை விளம்பரப்படுத்தினால், அவர்கள் மற்ற தகுதியுள்ள அனைத்து தொழிலாளர்களுக்கான வாய்ப்பை மறுக்கிறார்கள்.’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
GIPHY App Key not set. Please check settings