இந்தியன்-2 வில் சுகன்யா வேண்டவே வேண்டாம்.. வெறுத்த ஷங்கர்
கடந்த 1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல், சுகன்யா, மனிஷா கொய்ராலா மற்றும் பல பிரபலங்கள் நடித்து வெளியான திரைப்படம் இந்தியன். இப்போது மீண்டும் ஷங்கர் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். ஷங்கர் இந்த படத்தில் சுகன்யா வேண்டவே வேண்டாம் என்று மறுத்து விட்டாராம். ஏனென்றால் இந்தியன் முதல் பாகத்தில் இந்தப் படத்தின் முழு கதையையும் சுகன்யாவிடம் ஷங்கர் கூறியிருக்கிறார். படத்தில் ஆடையின்றி நடிப்பது போல ஒரு காட்சி. அதற்கு சுகன்யா சரி என சொன்னாராம். அதன் பிறகு அரசியல் பிரபலம் ஒருவருடன் சுகன்யா லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்துள்ளார். தனக்கு பெரிய இடத்தில் செல்வாக்கு இருப்பதாக நினைத்துக் கொண்ட சுகன்யா அதன் பிறகு இந்தியன் படத்தில் ஆடையின்றி நடிக்க முடியாது என கூறியுள்ளார். இதற்கு ஷங்கர் ஆரம்பத்திலேயே இதற்கு ஒற்றுக்கொண்டுதானே படத்தில் நடிக்க வந்தீர்கள். என கேட்டுள்ளார்.
அதற்கு அப்படித்தான் பண்ணுவேன் என திமிராக சுகன்யா கூறியிருந்தாராம். வாக்குவாதம் ஒரு கட்டத்திற்கு மேல் முற்றிப்போய் உள்ளது. மேலும் பெரிய இடத்தில் இருந்து ஷங்கருக்கு குடைச்சலும் வந்துள்ளது. ஷங்கர் வேறு வழியில்லாமல் அந்த காட்சியை மட்டும் டூப் வைத்து எடுத்திருந்தார்.ஆனாலும் இந்த காட்சியில் நான் நடித்தது போல தான் மக்கள் நினைப்பார்கள் என்று சுகன்யா கூறி ஷங்கர் மீது புகார் அளித்திருந்தார். இதனால் வெறுத்துப் போன ஷங்கர் இந்தியன் 2 படத்திலும் சுகன்யாவை புக் செய்யவில்லையாம்
GIPHY App Key not set. Please check settings