இதுவரைக்கும் பார்த்திடாத மனோரஞ்சிதம் பூ

இந்த பூவுக்கு என்று ஒரு தனித்துவம் உண்டு. நாம் ஏதாவது ஒரு பழத்தினை நினைத்து கொண்டு இதனை நுகர்ந்து பார்த்தால் அந்த பழத்தின் வாசம் வரும் என்று சொல்வார்கள்.
நான் பள்ளி சென்ற காலத்தில் சயின்ஸ் லேப் பக்கத்துல இந்த மரம் (மரம் என்றும் சொல்ல முடியாது, செடி வகையிலும் சேர்க்க முடியாது, ஒரு மாதிரியான குற்று செடியிலும் சேராத வெரைட்டி )நிற்கும்.சாயங்காலம் 4 மணிக்கு மேல ஒரு வாசம் வரும் பாருங்க… அதை வார்த்தையால் சொல்ல இயலாது. அதுவும் லேசான மழை சாரல் தூவும் நாளில் இதன் வாசம் சொல்லி விவரிக்க இயலாது. பூ வாசம் என்றால் நுகர மட்டும் தோன்றும். இது பூ வாசம் மட்டுமே இல்லாது ஏதோ ஒரு பழ வாசமும் கலந்து நாவின் சுவை அரும்புகளையும் கிளெர்ந்தெழ செய்யும்.
பூ என்றால் மற்ற பூ வகைகள் போன்று மெல்லிய இதழ்களுடன் மென்மையாக இருப்பதில்லை. இதழ்கள் கொஞ்சம் தடிமனாகவும் உறுதியாகவும், தொட்டு பார்த்தால் மெத்தென்று பட்டு போலவும் நன்கு பழுத்த மாங்கனி போன்று மிக அழகான மஞ்சள் நிறத்திலும் மின்னும்

ஒரு பூ கூட விடாமல் அத்தனையையும் பறித்து ஒவ்வொரு பழம் பெயரை சொல்லி முகர்ந்து பார்த்தது இப்போது நினைத்தாலும் சுகானுபவம்.
ஆனால் எல்லா பழவாசமும் மாறி மாறி வருவதாக முகர்ந்த அணைவரும் கூறுவார்கள்

இதற்கு மருத்துவ குணங்கள் நிறைய உள்ளதா சொல்வாங்க, ஆனால் அது பற்றி எனக்கு தெரியல, தெரிஞ்சுக்கணும். இப்போ இந்த செடி எங்கேயும் கண்ணுல படவும் இல்லை. கண்டிப்பாக வீட்ல ஒண்ணு வளர்க்கணும்…