in

இங்கிலாந்தில் குடியேருபவர்களுக்கான புதிய விதிமுறைகள் அமல்


Watch – YouTube Click

இங்கிலாந்தில் குடியெருபவர்களுக்கான புதிய விதிமுறைகள் அமல்

இங்கிலாந்தில் வேலைக்காக குடிபெயர்பவர்களுக்ககான புதிய விதிமுறைகளை இங்கிலாந்து அரசு வகுத்துள்ளது. இந்த விதிமுறைகளில் சில கடுமையான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

இங்கிலாந்தில் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் வேலை செய்கின்றனர். அதிலும் இந்தியாவில் இருந்து திறமையான நபர்கள் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் தங்கி வேலை பார்க்கின்றனர்.

இந்தச் சூழ்நிலையில் இங்கிலாந்தில் புதிதாக குடி பெயர்பவர்களுக்கான விதிமுறைகளை இங்கிலாந்து அரசு வகுத்துள்ளது.

இதற்கான அறிவிப்பை பிரிட்டன் உள்துறை அமைச்சர் ஜேம்ஸ் கிளாவர்லி வெளியிட்டார்.

இந்த விதிமுறைகள் மட்டும் கடந்த ஆண்டு நடைமுறைக்கு வந்திருந்தால் இங்கிலாந்தில் வேலைக்காக குடியேறுபவர்களின் எண்ணிக்கை 3 லட்சம் குறைந்து இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த புதிய விதிமுறைப்படி திறமையான
ஊழியர்களுக்கு ஆண்டு வருவாய் 38,700 பவுண்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது பிரிட்டனில் திறமை படைத்த வெளிநாடு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 26 ஆயிரம் பவுண்டு மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த புதிய விதிமுறையின் படி ஊழியர்களுக்கு 50 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்கப்படுகிறது.

அதேசமயம் ஹெல்த் மற்றும் சோசியல் கேர் விசா மூலம் இங்கிலாந்தில் வேலை தேடி வருபவர்களுக்கு இந்த புதிய விதிமுறைகள் பொருந்தாது என்று உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

மேலும் இந்த புதிய விதிமுறைகள் படி இங்கிலாந்தில் குடியேறும் வெளிநாட்டினர் தங்களது பெற்றோரையோ அல்லது பிள்ளைகளையோ அழைத்து வர அனுமதி இல்லை.

ஆகையால் இந்த விதி முறையானது சர்வாதிகார நோக்கத்தில் கொண்டுவரப்பட்டதாக ஒரு சிலர் கருதுகின்றனர்.

இங்கிலாந்தில் பெரும்பாலான நிறுவனங்களில் அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டு பணியாளர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். இந்த புதிய விதிமுறையின் படி அவர்களது எண்ணிக்கையை குறைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வேலை தேடி வருபவர்களின் வீதமும் இங்கிருந்து வெளியேறுபவர்களின் வீதமும் 7 லட்சத்து 45 ஆயிரம் ஆக பதிவானது குறிப்பிடத்தக்கது.


Watch – YouTube Click

What do you think?

லஞ்சம் வழக்கு அமலாக்க துறை அதிகாரி ஜாமீன் மனு

புயல் நேரங்களில் ஏற்படும் சேதம் கடற்கரை சாலையில் சாலை மறியல்