இங்கிலாந்தில் ஆபரேஷனுக்காக காத்திருக்கும் 40 லட்சம் பேர்

கரோனா பரவல் காரணமாக மருத்துவமனைகளில் ஆபரேஷன் செய்வதற்காக காத்திருக்கும் நோயாளிகள், மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இங்கிலாந்தில் கரோனா பரவ தொடங்கி காலகட்டத்திலிருந்து கடந்த பிப்ரவரி வரையிலான நிலவரப்படி, 40 லட்சத்து 70 ஆயிரம் பேர் வழக்கமான ஆபரேஷனுக்காக காத்திருப்பதாக தேசிய சுகாதார சேவைகள் துறை (என்.எச்.எஸ்) வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2007}ஆம் ஆண்டுக்குப் பிந்தைய அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

குறிப்பாக சுமார் 3 லட்சத்து 88 ஆயிரம் பேர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக அவசரமில்லாத அறுவை சிகிச்சைக்கு காத்திருப்பதாகவும், இதே எண்ணிக்கை கரோனா பரவலுக்கு முன்பு வெறும் 1,600 ஆக இருந்ததாகவும் தேசிய சுகாதார சேவைகள் துறை தெரிவித்துள்ளது.

கடந்த குளிர்காலத்தில் இருபது லட்சம் அறுவை சிகிச்சைகள் நடைபெற்ற போதிலும், திட்டமிட்ட அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த பெரும்பாலான நோயாளிகள், கரோனா பரவலின் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டதால், அவர்களுக்கான அறுவை சிகிச்சை நடைபெறுவதில் தாமதம் நிலவுகிறது. தற்போது கரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவி வருவதால், மருத்துவமனைகள் கடுமையான அழுத்தத்தை எதிர்கொண்டு வருவதாக அறுவை சிகிச்சை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து டார்த்மவுத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், கரோனா பரவலால் நிலைமை மிகவும் மோசமாக மாறிவிட்டது. இந்தப் பின்னடைவை எதிர்கொள்ள தேசிய சுகாதார சேவைகள் துறைக்கு தேவையான அனைத்து நிதியுதவியும் வழங்கப்படும். ஆகையால், சிகிச்சை தேவைப்படுவோர் அதற்கான அப்பாய்ண்மெண்ட் பெற்று சிகிச்சையை தொடர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தேசிய சுகாதார சேவைகள் துறையின் மருத்துவ இயக்குநர் பேராசிரியர் ஸ்டீபன் போயிஸ் கூறுகையில், கடந்த ஓராண்டில் மட்டும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 40 ஆயிரம் பேரை தனிமைப்படுத்தி சிகிச்சையளித்தது, தேசிய சுகாதார சேவைகள் துறையின் பிற சேவையில் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தியது.

நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 40 சதவீதத்தினர், இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள். மருத்துவப் பணியாளர்களின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பு உணர்வும்தான் குளிர்காலத்தில் கரோனா பரவல் அதிகரித்த நிலையிலும், 20 லட்சம் அறுவை சிகிச்சைகள் நடைபெறுவதற்கு உதவிகரமாக அமைந்தது என்றார்.

Add your comment

Your email address will not be published.

8 + one =