ஆவணப்படம் எடுக்கும் அஜீத் – குஷியில் ரசிகர்கள்
அஜித் தற்போது தான் அவரின் வேர்ல்ட் டூரின் ஒரு பகுதியை வெற்றிகரமாக முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார். த்ரில்லர் படங்களை இயக்குவதில் பெயர்பெற்ற மகிழ் திருமேனி இப்படத்தை இயக்குவதாக ஒரு வழியாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டது.இதையடுத்து மகிழ் திருமேனி முழு கதையையும் ரெடி செய்துவிட்டு அஜித்திற்காக காத்துக்கொண்டிருக்கிறார். இப்படம் ஹாலிவுட் தரத்தில் உருவாக இருப்பதால் அதற்கு ஏற்றவாறு லொகேஷன்களை தேடி வருகின்றார் மகிழ் திருமேனி. இந்நிலையில் மே மாதம் இறுதியில் விடாமுயற்சி படத்தி படப்பிடிப்பை துவங்கி அஜித் நவம்பர் மாதம் அடுத்தகட்ட வேர்ல்ட் டூரை துவங்கவுள்ளதால் நவம்பர் மாதத்திற்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் ஒரு செய்தி வந்துள்ளது. அதாவது அஜித் தற்போது உலகம் முழுக்க பைக் சுற்றுலா செல்வதை ஒரு ஆவணப்படமாக எடுத்து அதை OTT யில் வெளியிட அஜித் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. மேலும் இதை பிரபல OTT நிறுவனமான நெட்பிலிக்ஸ் வெளியிட இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
தற்போது இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களை அஜித் சுற்றிவந்த நிலையில் இந்த பயணத்தில் பல்வேறு அனுபவங்களை அஜித் பெற்றுள்ளார் எனவே அதனை ரசிகர்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அவரது பயணத்தை OTT யில் வெளியிட முடிவெடுத்துள்ளார் அஜித்
GIPHY App Key not set. Please check settings