ஆடை இல்லாமல் நடிக்க சமந்தா சம்மந்தம் சர்ச்சையில் சிக்குவாரா
இந்தியளவில் பிரபலமான நடிகையாக இருக்கும் சமந்தா தற்போது கைவசம் குஷி படத்தை வைத்துள்ளார். அதே போல் இந்தியில் உருவாகி வரும் சிட்டாடல் வெப் தொடர் ஒன்றிலும் நடித்து வருகிறார். இந்த வெப் தொடரை ஆங்கிலத்தில் பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார். அதன் இந்தி வெர்ஷனில் பிரியங்கா சோப்ரா நடித்துள்ள கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார். சிட்டாடல் ஆங்கில வெப் தொடரில் வரும் காட்சி ஒன்றில் நடிகை பிரியங்கா சோப்ரா ஆடை இல்லாமல் படுக்கையறை காட்சியில் நடித்திருந்தார். இந்நிலையில் இந்தியில் உருவாகும் சிட்டாடல் வெப் தொடரிலும் அதே காட்சிகளில் சமந்தா காணப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சமந்தவிற்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழும் என்றும் கூறப்படுகிறது.
இதற்க்கு முன் இந்தியில் வெளிவந்த தி பேமிலி மேன் 2 வெப் தொடரிலும் சற்று எல்லைமீறிய காட்சிகளில் நடித்திருந்தார். அதற்காக பல விமர்சனங்களையும் அவர் எதிர்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
GIPHY App Key not set. Please check settings