அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்தியது டென்மார்க்

அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபர்களுக்கு ரத்தம் உறைதல் கண்டறியப்பட்டதால், அந்தத் தடுப்பூசியின் பயன்பாடு டென்மார்க் நாட்டில் முழுமையாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியனில் இத்தடுப்பூசியை முதன்முதலில் நிறுத்திவைக்கும் நாடாக டென்மார்க் அறியப்படுகிறது. இதன்மூலம் அந்நாட்டில் தடுப்பூசி திட்டம் மேலும் பல வாரங்கள் தாமதமாகும் எனக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியை பயன்படுத்தினால், ரத்தம் உறைதல் போன்ற பின்விளைவுகள் ஏற்படும் என்று அறிவித்திருந்த ஐரோப்பிய மருந்துகள் முகமை, கோவிட் 19 ஏற்படும்பட்சத்தில் உயிரிழப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாகவும் கூறியிருந்தது. இதன் காரணமாக அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்திவைத்திருந்த பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள், அதனை மீண்டும் பயன்படுத்த தொடங்கிவிட்டன. எனினும், வயதான நபர்களுக்கு அந்தத் தடுப்பூசியை செலுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இதே காரணத்துக்காக ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவன தடுப்பூசி பயன்பாட்டை அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடா, ஐரோப்பிய யூனியன் ஆகியன கடந்த செவ்வாய்க்கிழமை நிறுத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.

Add your comment

Your email address will not be published.

two × five =