அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியால் பக்க விளைவா?

அஸ்ட்ராஜெனிகா கொவைட் 19 தடுப்பூசி செலுத்திக் கொள்வதால், அசாதாரண ரத்தம் உறைதல் ஏற்படும்பட்சத்தில், அது மிகவும் அரிதான பக்க விளைவாக கருதப்படும் என ஐரோப்பிய யூனியனுக்கான மருந்து கட்டுப்பாட்டு முகமை தெரிவித்துள்ளது.

ஐரோப்பாவில் 86 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில், இத்தகவலை வெளியிட்டுள்ள ஐரோப்பிய மருந்துகள் முகமை (இஎம்ஏ) இதனால் அபாயம் ஏதுமில்லை எனவும் தெளிவுபடுத்தியுள்ளது.
அதிலும் அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் பெரும்பாலும் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மட்டுமே ரத்தம் உறைதல் கண்டறியப்பட்டதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 30வயதுக்கு உள்பட்டோருக்கு மாற்றுத் தடுப்பூசி பரிந்துரை செய்வதாவும் பிரிட்டனின் தடுப்பூசி ஆலோசனை அமைப்பு தெரிவித்துள்ளது.

Add your comment

Your email address will not be published.

thirteen + 19 =