அஷ்டம சனி என்றாலும் விபரீத ராஜயோகம்தான்

சனி பெயர்ச்சி பற்றி பலரும் விசாரித்துக் கொண்டிருக்கின்றனர். ஏழரை சனி பற்றி எத்தனை பேர் பயப்படுகிறார்களோ அதே போல அஷ்டம சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டம சனி பற்றியும் பலருக்கும் பயம் இருக்கிறது. கண்டச் சனி இரண்டரை வருடம் படுத்தி எடுத்தாலும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் அஷ்டமத்து சனியாக பாதிப்பை ஏற்படுத்தும். சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப் பெயர்ச்சி அடைகிறார். மிதுனம் ராசிக்கு சனி பகவான் எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் அமர்கிறார். சனி மிதுனம் ராசிக்கு எட்டாம் வீட்டு அதிபதி. எட்டுக்கு உடையவன் எட்டாம் வீட்டில் அமர்வது விபரீத ராஜயோக காலம் என்பதால் அஷ்டம சனி வந்து விட்டதே என்று பயப்பட வேண்டியதில்லை.

நவகிரகங்களில் சனியைப் பார்த்து பயப்படாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். சனி சஞ்சரிக்கும் இடத்தைப் பொருத்து பலன்களும் பாதிப்பும் ஏற்படும் என்று தான் சனிபகவான் மகரம் ராசிக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி செல்கிறார். இந்த சனிப் பெயர்ச்சியால் பாதிப்பு எதுவும் இருக்காது காரணம் சனிபகவான் தனது ராசியில் ஆட்சி பெற்று அமரப் போகிறார்.

திருக்கணித பஞ்சாங்கப்படி சனி பகவான் விகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார். விருச்சிக ராசிக்காரர்கள் கடந்த ஏழரை ஆண்டுகாலம் சனியில் பிடியில் சிக்கியிருந்தார்கள். அவர்களுக்கு ஏழரை சனி முடிகிறது. அதேபோல ரிஷப ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்து சனி முடிகிறது. மிதுனம் ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி ஆரம்பிக்கிறது என்றாலும் மிதுனம் ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு, செய்யும் தொழிலில் உயர்வும் கிடைக்கும்.

சனி பகவான் மகரத்தில் உத்திராடம் 2,4, திருவோணம், அவிட்டம் 1,2 ஆகிய நட்சத்திரங்களில் சனி சஞ்சரிக்கிறார். சனி பகவான் உத்திராடம் நட்சத்திரத்தில் 2020 ஜனவரி 24 தொடங்கி, 2021 ஜனவரி 15ஆம் தேதி வரை உத்திராடத்தில் சஞ்சரிக்கிறார். திருவோணம் நட்சத்திரத்தில் 2022 பிப்ரவரி 17ஆம் தேதி வரை திருவோணம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். அவிட்டம் நட்சத்திரத்தில் 2022 மே மாதம் வரைக்கும் சஞ்சரிக்கும் அவர் கும்ப ராசியில் உள்ள அவிட்டம் நட்சத்திரத்தில் அதிசாரமாக நகர்கிறார்.

சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போடும் கன்னிச்சாமிங்களே… இதை ஃபாலே பண்ணுங்க

ராஜயோகம் தரும் சனி
சனி மிதுனம் ராசிக்கு எட்டு மற்றும் ஒன்பதுக்கு உடையவர். சனி உங்க ராசிக்கு யோகக்காரர். அதிர்ஷ்டகரமான காலம். காரணம் எட்டுக்கு உடையவர் எட்டில் அமர்வது ராஜயோகம். மறைந்திருக்கும் உண்மைகளை வெளிக் கொண்டு வருவீர்கள். அஷ்டம சனி காலத்தில் உடல் ரீதியாக பாதிப்பு வரலாம் எச்சரிக்கை தேவை.

பணம் பத்திரம்
சனி பார்வை பத்தாம் வீட்டின் மீது விழுகிறது. இரண்டாம் வீடு, மற்றும் ஐந்தாம் வீட்டின் மீது சனியின் பார்வை விழுகிறது. இந்த கால கட்டத்தில் பிசினஸ் செய்பவர்கள் பண முதலீடுகளில் எச்சரிக்கையாக இருங்க. பணத்தை பத்திரமாக வச்சிக்கங்க. குடும்பத்தில இருக்கிறவங்க கிட்ட பேசும் போது ஜாக்கிரதையாக பேசணும், இல்லாட்டி தவறா புரிஞ்சுக்குவாங்க. கணவன் மனைவிக்கு இடையே கூட சண்டைகள் வரலாம் கவனமாக பேசணும்.

வேலை செய்யும் இடத்தில உங்க திறமைகள், புகழ், பெருமைகளை மற்றவர்கள் சொந்தம் கொண்டாடுவாங்க அதனால உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படலாம்.

முதலீடு வேண்டாம்
ஏழாம் வீட்டில் இருந்த சனியால் கடந்த இரண்டரை ஆண்டு காலமாகவே கணவன் மனைவி பிரச்சினை ஏற்பட்டிருந்தது. இனி அந்த பிரச்சினைகள் படிப்படையாக முடிவுக்கு வரும். பணமுதலீடுகளை செய்ய வேண்டாம். புதிய தொழில் எதுவும் தொடங்க வேண்டாம். பேராசை படவேண்டாம். பங்குச் சந்தை முதலீடு தேவையே இல்லை. இருக்கிறதை வைத்துக் கொண்டு சிறப்புடன் வாழுங்கள். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வேலைகளை விடும் முன்பு ஒரு முறை இரு முறை யோசிக்கவும். யாராவது பணம் கடன் கேட்டு வந்தால் ஜாக்கிரதையாக இருங்கள் அவசரப்பட்டு கொடுத்து விட்டு அவதிப்பட வேண்டாம்.

தைரியம் அதிகமாகும்
உத்திராடம் சூரியன் நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் கால கட்டத்தில் தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும். முயற்சி திருவினையாக்கும். திருவோணத்தில் சனி சஞ்சரிக்கும் காலத்தில் மனதில் எண்ணங்கள் அலைபாயும். பேச்சினால் பிரச்சினை வரலாம் ஜாக்கிரதை. சனி அவிட்டம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் வெளிநாடு வேலை வாய்ப்புக்கு முயற்சி பண்ணலாம். உங்க தசாபுத்தி எப்படி இருக்குன்னு பாருங்க.

திங்கட்கிழமை, சனிக்கிழமைகளில் திருப்பதி ஏழுமலையானை வணங்கிட்டு வாங்க சனியால் ஏற்பட்ட சங்கடங்கள் தீரும். அறுபடை வீடுகளுக்கு யாத்திரை போயிட்டு வாங்க நல்லது நடக்கும்