in

அருள்மிகு வேதநாத ஈஸ்வர ஆலயத்தில் உள்ள சர்வவேத பைரவருக்கு தேய்பிறை ஜென்மஷ்டமி பூஜை


Watch – YouTube Click

அருள்மிகு வேதநாத ஈஸ்வர ஆலயத்தில் உள்ள சர்வவேத பைரவருக்கு தேய்பிறை ஜென்மஷ்டமி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ வேதநாத ஈஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள அருள்மிகு சர்வவேத பைரவருக்கு கார்த்திகை மாத தேய்பிறை ஜென்மஷ்டமி சிறப்பு அபிஷேகம் ஆராதனை மிக விமர்சியாக நடைபெற்றது.

மாதம் தோறும் அஷ்டமி தினங்களில் அருள்மிகு சர்வவேத பைரவருக்கு பச்ச அரிசிமாவு, அபிஷேக பொடி, மஞ்சள் பொடி, பால், தயிர், இளநீர், எலுமிச்சை சாறு, கரும்புச்சாறு, விபூதி, பன்னீர் சந்தனம் உள்ளிட்ட அபிஷேக திரவியங்களை கொண்டு மகா அபிஷேகம் நடைபெறுவது. வழக்கம் அதன்படி கார்த்திகை மாத தேய்பிறை ஜென்மஷ்டமி முன்னிட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழுங்க 64 மூலிகை வகைகளை கொண்டு யாகம் நடைபெற்றது. பின்பு சர்வவேத பைரவருக்கு 16 வகை திரவியங்களை கொண்டு மகா அபிஷேகங்கள் அதனைத் தொடர்ந்து கலச புனித நீர் ஊற்றப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் குடும்ப கடன் பிரச்சினை திருமண தடை நீங்கும் என்பதால் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Watch – YouTube Click

What do you think?

நாகை மாவட்டம் சார்பில் சென்னைக்கு நிவாரண பொருட்கள்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் கோலி சோடா 2 பட நடிகர் வில்லன் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினார்.