in

அரசின் அலட்சியத்தால் புதுவையில் கோவில் சொத்து அபகரிப்பு – இந்து முன்னணி கழகம் ஆவேசம் | Expropriation of temple property in Puducherry

புதுச்சேரி மாநிலத்தில் கோயில் சொத்துக்கள் நிறைய ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது. குறிப்பாக அரசியல்வாதிகளின் தலையீடு இருக்கின்றது.புதுச்சேரி காமாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமாக நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை எதிர்த்து இந்து முன்னணி பலக்கட்ட போராட்டங்களை நடத்தி இருக்கின்றது. அதன் விளைவாக சிலபேர் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

இந்த இடத்துக்கு போலி பத்திரம் தயாரித்துள்ளனர். இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். இதற்கு உடந்தையாக இருந்தது யார்? வருவாய்துறையினரா, அறநிலையத்துறை அதிகாரிகளா என்பதை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவ்வாறு எடுக்காவிட்டால் இந்து முன்னணி போராட்டம் நடத்தும். இதுபோல் சன்னியாசித்தோப்பு பகுதியில் கோயிலுக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். மேலும் சிலர் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சித்து வருகின்றனர். இதற்கு போலி ஆவணங்கள் தயாரிக்கவும் சில அரசியல் வாதிகள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதனை அரசு உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தமிழக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேட்டி அளித்தார்.

puducherry,puducherry news,puducherry india,puducherry karaikal,puducherry tamil nadu, puducherry politics,puducherry cm v narayanasamy,governor of puducherry,puducherry government,puducherry assembly

What do you think?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

கணவரை மட்டும் என்னால் ஷேர் பண்ணிக்க முடியாது – கண்ணீருடன் குட்டி பத்மினி

பல் பிடுங்கி பல்வீர் சிங்குக்கு எதிராக 4 போலீசார் வாக்குமூலம் | Ambasamudram custodial torture