in

அம்பேத்கர் நினைவு தினம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மலர் தூவி மரியாதை


Watch – YouTube Click

அம்பேத்கர் நினைவு தினம்அவரது திருவுருப்படத்திற்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் டாக்டர் அம்பேத்கரின் 67 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

இதை முன்னிட்டு செஞ்சி பேருந்து நிலையம் எதிரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார், பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை ,பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், நகர செயலாளர் கார்த்திக்,பேரூராட்சி மன்ற துணை தலைவர் ராஜலட்சுமி செயல் மணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


Watch – YouTube Click

What do you think?

பெற்றோர் கேள்விக்கு மாணவன் விபரீத முடிவு

கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நாகை மாவட்ட மீனவர்கள்