அப்படியே நடிச்சிட்டேன்… லிப்லாக் சீனெல்லாம் ஒரு மேட்டர் ஆ அமலா பால் பளீச்
ஆடுஜீவிதம் திரைப்படத்தில் நடிகர் பிரித்விராஜுடன் லிப்லாப் முத்தக்காட்சியில் நடித்தது பற்றி நடிகை அமலாபால் மனம்திறந்து பேசி உள்ளார்.மலையாள நடிகையான அமலா பால், தற்போது நாயகியாக நடித்துள்ள திரைப்படம் ஆடு ஜீவிதம். இப்படத்தில் நடிகர் பிருத்விராஜ் சுகுமாரனுக்கு மனைவியாக நடித்துள்ளார் .கடன் தொல்லையால் அவதிப்படும் பிரித்விராஜ், கடனை அடைப்பதற்காக வெளிநாட்டிற்கு சென்று சம்பாதிக்க முடிவெடுத்து சவூதிக்கு செல்கிறார். அங்கு ஆடு மேய்ப்பவராக மாறும் அவர், என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொண்டார் என்பதை தத்ரூபமாக படமாக்கி உள்ள திரைப்படம் தான் ஆடு ஜீவிதம். சமீபத்தில் ரிலீஸ் ஆன ஆடு ஜீவிதம் படத்தின் டிரைலர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்தது என்று தான் சொல்ல வேண்டும். அதில் பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் போது அவர் பட்ட கஷ்டங்களை பார்க்கும்போது நமக்கே கண்ணீர் வருமளவுக்கு மனதை பிசையும் அளவுக்கு அழுத்தமான காட்சிகள் நிறைந்த படமாக இது இருக்கும் என டிரைலரை பார்க்கும் போதே தோன்றுகிறது. மறுபுறம் டிரைலரில் லிப்லாக் காட்சி ஒன்றும் இடம்பெற்று இருக்கும்.அமலா பாலும், பிருத்விராஜும் மிகவும் நெருக்கமாக நடித்துள்ள அந்த காட்சி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்து அமலா பால் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூலாக பதிலளித்துள்ளார். ஆடு ஜீவிதம் படத்தின் கதையை சொல்லும்போதே பிருத்விராஜ் லிப்லாக் சீன் பற்றி சொன்னதாகவும், படத்திற்கும் கதைக்கும் அது தேவைப்பட்டதன் காரணமாகவே அதில் நடித்தேன் என கூறியுள்ள அவர், கதைக்கு தேவைப்பட்டதால் நிர்வாணமாகவே நடித்த தனக்கு லிப்லாக் காட்சியெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை என பதிலளித்துள்ளார்.
GIPHY App Key not set. Please check settings