அந்த ஆடையில் லேடீஸ் காலேஜ்க்குள் நுழைந்த கமல்
பிரபல நடிகர் கமல்ஹாசன் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக உள்ளார். இவர் பன்முக திறமைகளால் அனைவரின் மனதை கவர்ந்தவர். இவரது உறவினர் தான் நடிகை சுஹாசினி, இவரும் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார். இவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் பலரும் அறியாத சுவரசியமான தகவல்களை கூறுவார்.இவ்வாறு தற்போது ஒரு மேடையில் பேசிய இவர் கமல் செய்த லீலைகளில் ஒன்றை பகிர்ந்துள்ளார்.”புதியதாக கார் வாங்கிய கமல் குயின் மேரிஸ் காலேஜில் உன்னை வந்து விடணும் என்று கூறினார்.அப்போ நம்ம மேல இருக்கிற பாசத்தால தான் நம்மை கொண்டு காலேஜில் விடப் போகிறார் என்று அதற்கு சம்மதமும் சொன்னேன்.அப்போது கமல் ஒரு டிராகன் டிரஸ் ஒன்று குட்டையாக அணிந்திருந்தார். அதை பார்த்த இந்த ட்ரெஸ்ஸில் நீங்க அங்க வரணுமா? என்று கேட்டேன் நான் எல்லாம் கீழே இறங்க மாட்டேன். எனக்கு வேற வேலை இருக்கிறது.
காரில் உன்னை விட்டு விட்டு போய் விடுவேன் அப்டினு சொன்னார். ஆனால் காலேஜ் வந்ததும் உடனே வந்து எனக்கு டிரைவர் மாதிரி கார் கதவை திறந்து விட்டார். அதுவும் குனிந்த படி அவர் கதவை திறந்ததை சுற்றி இருப்பவர்கள் வாய் பிளந்து பார்த்தாங்க. எனக்கு அந்த நேரத்தில் வெட்கமாக இருந்தது.நான் என்னுடைய துப்பட்டாவில் முகத்தை மூடிக்கொண்டு ஓடி விட்டேன். ஆனால் கமல் அந்த நேரத்தில் எதுவும் நடக்காதது போல ஹாயாக போய்க் கொண்டிருந்தார்” என்று கூறினார்.
GIPHY App Key not set. Please check settings