in

அடைக்கலம் காத்த அய்யனார் ஆலய மஹா கும்பாபிஷேகம் |Maha Kumbabhishekam at the Ayyanar Temple


Watch – YouTube Click

நாகை அருகே பன்னாள் ஸ்ரீ அடைக்கலம் காத்த அய்யனார் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்; சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்பு

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த பன்னாள் கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ அடைக்கலம் காத்த அய்யனார் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயிலின் வர்ண கலாபரண ஜீர்ணோத்தாரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைப்பெற்றது.

கடந்த 14 ம் தேதி விக்னேஷ்வர பூஜைகளுடன் துவங்கிய நிகழ்ச்சியில் தொடர்ந்து வாஸ்து சாந்தி லஷ்மி ஹோமம், ரக்ஷபந்தனத்துடன் யாகசாலை பூஜைகள் நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து இன்று நான்காம் கால யாகசாலை பூஜைகளுடன் மகா பூர்ணாஹுதி நடைப்பெற்று சிறப்பு தீபாரதனைக்கு பிறகு கடம் புறப்பாடு நடைப்பெற்றது.

மங்கல வாத்தியம் முழங்க புனித நீர் அடங்கிய கலசத்தை சிவாச்சாரியர்கள் ஊர்வலமாக எடுத்து வந்து கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைப்பெற்றது..அதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக புனித நீர் அங்கிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

தொடர்ந்து ஸ்ரீ பிடாரியம்மன் ஸ்ரீ அண்ணன்செவந்தான் ஸ்ரீ கொம்புகாரன் ஸ்ரீ துண்டிக்கரன் ஸ்ரீ சொக்கநாதர் ஸ்ரீ மூர்த்தி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைப்பெற்றது. இதில் பன்னாள் கடிநெல்வயல் ஆயக்காரன்புலம் காரியாபட்டினம் கருப்பம்புலம் தென்னம்புலம் பஞ்சநதிக்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Watch – YouTube Click

What do you think?

புயல் சின்னம், கடல் சீற்றம், காரணமாக மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு

முசிறி ஐயப்பன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது |Kumbabhishek ceremony at Musiri Ayyappan temple