அஜித்தை சார்னு அழைக்க காரணம் இது தான் ராதாரவி
கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் குமார் மீது திரையுலக பிரபலங்களுக்கும், ரசிகர்களுக்கும் தனி மரியாதை உண்டு.
தன்னை விட வயதில் சிறியவரான அஜித்தை நடிகர் ராதாரவி எப்பொழுதுமே அஜித் சார் என்று தான் அழைப்பார். இது குறித்து பேட்டி ஒன்றில் ராதாரவியிடம் கேட்கப்பட்டது.அதற்கு அவர் கூறியதாவது,
மறைந்த நடிகர் ஜெய்சங்கரின் மகன் விஜய் சங்கர் ஒரு கண் டாக்டர். 5 ஆயிரம் ஆபரேஷனுக்கு மேல அஜித் சார் பணம் கொடுத்திருக்கிறார் என விஜய் சங்கர் என்னிடம் சொல்லியிருக்கிறார். அதில் இருந்து தான் நான் அஜித் சார் என்று அழைக்க ஆரம்பித்தேன். இல்லைனா அஜித் குமார் தான்.
என் மச்சான் குமாரின் நண்பர் தான் அஜித். கண் தானம் பண்ணுவது பெரிய விஷயம். பலருக்கு கண் ஆபரேஷன் செய்ய உதவியதால் அவரை அஜித் சார் என்று கூப்பிடுகிறேன் என்றார். ராதாரவி தெரிவித்த அந்த விஷயம் குறித்து அஜித் ரசிகர்களும், சினிமா ரசிகர்களும் சமூக வலைதளங்களில் பெருமையாக பேசி வருகிறார்கள். கண் ஆபரேஷன் செய்ய பலருக்கு நிதியுதவி செய்து வருகிறார் அஜித்.. முன்னதாக அமர்க்களம் படத்தில் அஜித் நடித்துக் கொண்டிருந்தபோது ஷூட்டிங்ஸ்பாட்டில் வைத்து அவரை சந்தித்து தன் நண்பனின் மகனுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய பணம் கொடுத்து உதவுமாறு பொன்னம்பலம் கேட்டிருக்கிறார்.பையன் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை குறித்த விபரங்களை பெற்றுக் கொண்ட அஜித், ஷாட் ரெடி என இயக்குநர் கூறியதும் சென்றுவிட்டாராம். அவர் ஒன்றுமே சொல்லாமல் சென்றதுடன் திரும்பி வந்ததும் தன் வேலையை பார்த்திருக்கிறார்.
நாம் உதவி கேட்டதை மறந்துவிட்டார் போன்று என பொன்னம்பலம் நினைவூட்ட, நீங்க இன்னுமா இங்க இருக்கீங்க. நீங்க சொன்னபோதே பில்லை கட்டிவிட்டேன் என்று கூறி அவரை நெகிழ வைத்திருக்கிறார். ஆனால் வழக்கம் போன்று அதை வெளியே சொல்வது இல்லை.அவரிடம் உதவி பெற்றவர்கள் சந்தோஷத்தில் வெளியே சொன்னால் தான் அஜித் செய்யும் நல்ல காரியங்கள் குறித்து வெளியே தெரிய வருகிறது
GIPHY App Key not set. Please check settings