in

அஜித்தை அவமானப்படுத்தி ஹோட்டல் நிர்வாகம் | Hotel management humiliated Ajith

அஜித்தை அவமானப்படுத்தி ஹோட்டல் நிர்வாகம்

தென்னிந்திய சினிமாவின் மாபெரும் நடிகராக உருவாகியுள்ள நடிகர் அஜித், நடிப்பதை காட்டிலும் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது, துப்பாக்கி சுடுதலில் ஆர்வம், பைக், கார் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டுவது என பல திறமைகளை கொண்டவர். அஜித் உலக சுற்றுலா மேற்கொள்ள திட்டம் தீட்டினார்.அந்த வகையில் துபாயில் குடும்பத்துடன் அஜித் சுற்றுலா மேற்கொண்ட சமயத்தில் அவரது தந்தை உயிரிழந்தார். அதோடு சென்னை வந்த அஜித், தற்போது மீண்டும் தனது பைக்கினை எடுத்துக்கொண்டு, தன் நண்பர்களுடன் உலகம் சுற்றி வருகிறார். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் சுற்றுலா மேற்கொண்டு வரும் அஜித் தற்போது நேபாளம் மற்றும் பூடான் நாட்டினை கடந்துள்ளார்.மேலும் மோசமான வானிலையால் சேரும், சகதியுமாக இருக்கும் நிலப்பரப்புகளில் அஜித் பைக்கை ஒட்டியுள்ளார் பைக் சுற்றி சேரும், சகதியுமாகவும் உடல் முழுவதும் அழுக்காகவும் இருந்த அஜித், தன் நண்பர்களுடன் ஹோட்டலில் தங்க சென்றுள்ளார். அப்போது அந்த ஹோட்டல் நிர்வாகத்தினர் கறுப்பாகவும், அழுக்காகவும் வந்த அஜித்தை பார்த்து அடையாளம் தெரியாமல் போக அவரையும், அவரது நண்பர்களையும் உள்ளே விட மறுத்துள்ளனர்.இந்த ஹோட்டலில் பெரிய பிரபலங்கள் தங்கியுள்ளனர், ஆகையால் நீங்கள் பின் வாசல் வழியாக வந்து என்ட்ரி போட்டுக்கொண்டு அறையில் தங்குமாறு கூறியுள்ளனர். இதைக்கேட்ட அஜித் சிரித்துக் கொண்டே பின் வாசல் வழியாக சென்றுள்ளார். அஜித்தின் இந்த தன்னடக்கமான செயல் பலரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது

What do you think?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

குழந்தையை என்னால் போய் பார்க்கமுடியது !!!!! அர்னாவ் அதிரடி முடிவு???

காசுக்காக இப்படியா நடிப்பிங்க நடிகை ராஷ்மிகாவை கழுவி ஊற்றும்நெட்டிசன்கள்