அசீம் வெற்றியில் முறைகேடு மீண்டும் விஸ்வருபம் எடுக்கும் சர்ச்சை
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசனின் வின்னரான அசீமின் வெற்றியில் முறைகேடு இருப்பதாக பிரபல யூடிப்பர் ஜோ மைக்கேல் ஆர்டிஐ யில் மனு அளித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார் மைக்கேல்.
இந்த சீசனில் விக்ரமன், அசீம், ஷிவின் மூவரும் இறுதிவரை முன்னேறினர். விக்ரமன் டைட்டில் வெல்வார் என எதிர்பார்த்த நிலையில் அசீம் வெற்றி பெற்றார். விக்ரமன் ரன்னர் ஆனார். அசீமின் வெற்றி பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது. பிக்பாஸில் பலமுறை நாமினேஷன் செய்யப்பட்டு, கமலால் அதிகம் விமர்சிக்கப்பட்ட அசீம் டைட்டில் வென்றது எப்படி என பலரும் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில் அசீம் வெற்றியில் முறைகேடு இருப்பதாக பிரபல யூடிப்பர் ஜோ மைக்கேல் ஆர்டிஐயில் மனு அளித்து தகவல் கேட்டிருந்தார். இந்த மனுவை திருப்பி பெற கூறி அசீம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் தன்னை மிரட்டுவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலத்தில் ஜோ மைக்கேல் புகார் அளித்துள்ளார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லியில் உள்ள இந்தியன் அறக்கட்டளையில் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அசீமின் வெற்றி குறித்து கேள்வி எழுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த மனுவை திருப்பி பெறக்கூறி அசீமின் நண்பர்கள் தன்னை மிரட்டி வருவதாகவும், மொபைல் போன் வழியாக தனக்கு கொலை மிரட்டல் விடுவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார் ஜோ மைக்கேல்.
GIPHY App Key not set. Please check settings